CBSE பாடத்திட்டத்தில் தமிழ் கட்டாயம்.. அசத்தலான அம்சங்களை கொண்டு வரும் புதுச்சேரி அரசு..

அரசு பள்ளிகளில் கொண்டுவரப்படும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் தமிழ் கட்டாயம்.

Update: 2023-06-02 04:44 GMT

புதுச்சேரி அரசு இந்த கல்வி ஆண்டு முதல் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை அரசு பள்ளிகளில் புகுத்த முடிவு எடுத்து இருக்கிறது. இதற்காக புதுச்சேரி அரசு இந்த கல்வி ஆண்டு முதல் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் மற்றும் 11ஆம் வகுப்பிற்கும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் வழங்கி இருக்கிறது, தற்போது புத்தகங்கள் கொள்முதல் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக அரசு பள்ளி ஆசிரியர்கள் கடந்த 15 நாட்களுக்கு மேலாக பயிற்சி அளிக்கப்பட்டு துரித ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.


அந்த வகையில் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் தமிழ் விருப்ப பாடமாக தான் உள்ளது. இந்த நடைமுறையில் மாணவர்கள் தமிழ் கற்கும் ஆர்வம் குறைந்து விடும். எனவே தமிழை கட்டாய பாடமாக்கப்பட வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து இருந்தார்கள் இந்நிலையில புதுச்சேரி முதலமைச்சர் இதற்கான ஒரு அறிவிப்பை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.


அது பற்றி அவர் கூறும் பொழுது கட்டாயம் பாடத்திட்டத்தில் தமிழ் சேர்க்கப்படும் கட்டாய பாடமாக அனைத்து குழந்தைகளும் தமிழ் கற்க வேண்டும் ஒரு கட்டாயத்தில் இருக்கிறார்கள் என்று கூறி இருக்கிறார். மேலும் சமூக அமைப்பினர் கொடுத்த மனுவை முதலமைச்சர் ஏற்று கொண்டு இதற்கான முயற்சிகள் விரைவில் எடுக்கப்படும் என்று கூறினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News