புதுச்சேரி: அரசு பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி!

புதுச்சேரி அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு தற்காலப்பு கலை பயிற்சி தொடங்கப் பட்டிருக்கிறது.

Update: 2023-01-12 02:45 GMT

புதுச்சேரி அரசு கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் சிக்ஷா மூலமாக ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு தற்போது தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஒரு நிகழ்ச்சியை அரசு ஏற்பாடு செய்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புதுவை அரசு கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி தொடங்கப்பட்டு இருக்கிறது.


அதன் ஒரு பகுதியாக கல் மண்டபம் அரசு பள்ளிகளில் தற்காப்பு கலை பயிற்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் கௌரி தலைமை தாங்கினார். மேலும் கராத்தே மாஸ்டர் ஞானசேகரன், முருகன் மற்றும் விஸ்வசுந்தரம் ஆகியோர் தற்காப்பு கலை பயிற்சி அளித்தார்கள். குறிப்பாக இன்றைய காலகட்டங்களில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை கற்க வேண்டிய ஒரு சூழ்நிலையில் இருக்கிறார்கள்.


பிறரிடம் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டிய மாணவர்களுக்கு பள்ளிகளில் இருந்து குறிப்பாக அரசு பள்ளிகளில் இருந்து இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது பல்வேறு தரப்பினர் இடையே வரவேற்பு பெற்று இருக்கிறது. மேலும் புதுச்சேரி அரசின் ஒரு புதிய முயற்சியாகவும் இது பார்க்கப்பட்டிருக்கிறது.

Input & image courtesy: Maalaimalar

Tags:    

Similar News