யோகா மற்றும் இறைவனை பிரிக்க முடியாது - புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்!
இறைவனையும், யோகாவையும் பிரிக்க முடியாது என்று புதுச்சேரி கவர்னர் கூறினார்.
புதுச்சேரியில் சர்வதேச யோகா தின திருவிழாவை புதுச்சேரி கவர்னர் மற்றும் முதல் அமைச்சர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்கள். மேலும் இந்த நிகழ்ச்சியில் பேசுக கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் கூறும் பொழுது இறைவனையும் யோகாவையும் நம்மால் பிரிக்க முடியாது என்று குறிப்பிட்டு இருக்கிறார். யோகா திருவிழா புதுவை அரசின் சுற்றுலாத்துறை சார்பில் ஆண்டுதோறும் சர்வதேச யோகா திருவிழா ஜனவரி மாதம் முதல் வாரம் நடத்தப்பட்டு வருகிறது.
எனவே அதை கொண்டாடும் விதமாக இந்த ஆண்டிற்கான யோகா திருவிழா நேற்று மாலை துவங்கி இருக்கிறது. இதனை புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்திருக்கிறார். விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன், சுற்றுலாத்துறை இயக்குனர் பிரியதர்ஷினி உள்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில் கவர்னர் பேசுவதற்கு, 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு...யோகா கலை 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததாக சரித்திரம் சொல்கிறது.
இந்தியாவில் யோகா என்பது நாகரிகம் தோன்றுவதற்கு முன்புஇந்தியாவில் யோகா என்பது நாகரிகம் தோன்றுவதற்கு முன்பு தோன்றியதாக அவர் குறிப்பிட்டு இருந்தார். மேலும் நம் பகுதியில் பல்லாயிரக்கணக்கான கோவில்கள் நிறுவப்பட்டுள்ள இறைவன் அமர்ந்திருப்பது யோகா நிலையில்தான் என்பதையும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இதனால் தான் இறைவனையும் யோகாவையும் நம்மால் பிரிக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.
Input & Image courtesy: Maalaimalar