புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்ட வித்தியாசமான பிள்ளையார் சிலை?
புதுச்சேரியில் பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்ட வித்தியாசமான பிள்ளையார் சிலை.
இந்தியா முழுவதும் இன்னும் சில நாட்களில் விநாயகர் சதுர்த்தி சிறப்பான முறையில் கொண்டாடப்பட இருக்கின்றது. இதன் காரணமாக பல்வேறு மக்கள் விநாயகர் சிலையை செய்வதற்காக தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் இந்த வருடம் விதைப் பிள்ளையார் போன்ற பல்வேறு வித்தியாசமான பிள்ளையார் சிலைகளை வடிவமைத்து வருகிறார்கள். புதுச்சேரியைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் தற்போது காகிதத்தின் மூலம் பிள்ளையார் சிலையை உருவாக்கி இருக்கிறார்கள்.
மாணவர்கள் பயன்படுத்திய பேப்பர்களை குப்பையில் தூக்கிப் போடும் பழக்கம் பல்வேறு மாணவர்களிடையே இன்றைய காலகட்டங்களில் இருந்து வருகிறது. குறிப்பாக தான் பயன்படுத்திய பேப்பர்களை போற போக்கில் குப்பை தொட்டியில் போட்டுவிட்ட அவர்கள் எண்ணுகிறார்கள். ஆனால் இதை மாற்றி யோசித்து, புதுவையை சேர்ந்த கோரிமேட்டில் உள்ள அரசு பள்ளியில் தான் இந்த பெரிய விநாயகர் சிலையை அவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் பள்ளியின் ஓவிய ஆசிரியராக இருந்து வருபவர் கிருஷ்ணன் இவர் மாணவர்களுக்கு கைவினைப் பொருட்களை உருவாக்கும் பயிற்சிகளை அளித்து வருகிறார்.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மாணவர்களுக்கு விநாயகர் சிலையை உருவாக்கும் பயிற்சியை ஓவிய ஆசிரியர் கிருஷ்ணன் அளித்து வருகிறார். வித்தியாசமான விநாயகர் சிலையை உருவாக்க வேண்டும் என்று எண்ணத்தில் பள்ளி மாணவர்கள் பயனற்ற பேப்பர்களை கொண்டு பிள்ளையார் சிலையை உருவாக்கி இருக்கிறார்கள். 4.5 அடி உயரத்தில் எந்த வித ரசாயனம் இன்றி இந்த கலைநயம் மிக்க விநாயகர் சிலை உருவாகி இருக்கிறது. பல்வேறு தரப்பிலிருந்து மாணவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கின்றன.
Input & Image courtesy: News