புதுச்சேரி: பள்ளி ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிர்வாகம்..

Update: 2023-06-28 03:49 GMT

புதுச்சேரியில் தற்போது அரசு பள்ளிக் கூடங்களில் பணியாற்றும் ஆசிரியர்களை பணியிடை மாற்றம் செய்வது தொடர்பாக அடுத்தடுத்த பிரச்சினைகள் தொடர்ச்சியான முறையில் அரங்கேறி வருகிறது. மேலும் பணிவிடை மாற்றம் செய்யப்படும் ஆசிரியர்கள் புது பணி இடங்களுக்கு செல்லாமல் இருப்பதும் அதுமட்டுமில்லாத அவர்கள் தொடர்ச்சியான முறையில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் செய்வதும் நீடித்து வருகிறது. இவர்கள் சட்டமன்றம் மற்றும் முதலமைச்சரின் வீடுகளை முற்றுகையிட்டு தொடர்ச்சியான முறையில் போராட்டங்களையும் செய்து வருகிறார்கள். 


அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்ட தான் இவர்களை பணியிடை மாற்றம் செய்து இருக்கிறது. ஆனால் அவற்றை அவர்கள் ஏற்றுக் கொள்ளாது தாங்கள் அருகில் உள்ள பள்ளிகளில் தான் தங்களை பணியிடை மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து இருக்கிறார்கள். இந்தநிலையில் இடமாறுதல் தொடர்பான வழிகாட்டுதல்கள் குறித்து பள்ளிக்கல்வி துணை இயக்குனர் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றையும் அனுப்பி இருக்கிறார்.


அந்த சுற்றறிக்கையில் இந்த கல்வி ஆண்டில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருபவர்களுக்கு தகுந்த வழிகாட்டுதலின் படி தான் இடமாறுதல் வழங்கப்பட்டிருக்கிறது. அவற்றை ஆசிரியர்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே ஒரே பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்கள் பணியிடை மாற்றத்தையும் போது வெவ்வேறு பள்ளிகளில் தான் மாற்றப்படுவார்கள் மீண்டும் அவர்கள் ஒரே பள்ளியில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News