புதுச்சேரி: தற்காப்பு பயிற்சியில் கலக்கும் அரசுப் பள்ளி மாணவிகள்... தமிழகத்தில் சாத்தியமா?
அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி நிறைவு விழா.
புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளில் தற்பொழுது மாணவர்களுக்கு பிரத்தியேகமாக தற்காப்பு கலை பயிற்சிகள் பயிற்றுவிக்கப் பட்டு வருகிறது. குறிப்பாக இன்றைய காலகட்டங்களில் உள்ள பெண்கள் தன்னுடைய பள்ளிகளிலேயே தற்காப்பு கலை பயிற்சிகளை பயிற்சி வைப்பதன் மூலமாக அவர்களுடைய எதிர்காலம் மேலும் சிறப்பாக அமையும். அவர்களுக்கு தேவைப்படுகின்ற நேரத்தில் இத்தகைய கலைகள் மிகவும் உபயோகம் தரும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
அவர்களுக்கு மட்டும் அல்லாது இந்த சமுதாயத்தில் அவர்கள் சுதந்திரமாகவும் மனதளவில் செயல்பட இத்தகைய தற்காப்பு கலை பயிற்சிகள் மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறப்பட்டு இருக்கிறது. இதுபோன்று தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளிலும் இத்தகைய தற்காப்பு கலை பயிற்சிகள் பெண் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதன் மூலமாக, அவர்களும் நிச்சயம் சுதந்திரமாக செயல்பட முடியும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். திருக்கனூர் புதுவை கொடாத்தூர் அரசு உயர்நிலை பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. கராத்தே பயிற்சியாளர் சரவணன் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார்.
இதன் நிறைவு விழா பள்ளி வளாகத்தில் பொறுப்பு ஆசிரியர் குமாரவேல் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பயிற்சி பெற்ற மாணவிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதைத்தொடர்ந்து மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முன்னதாக ஆசிரியர் கார்த்திக் வரவேற்றார். இதில் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் ரகுமான் நன்றி கூறினார்.
Input & Image courtesy: News 18