புதுச்சேரி அரசாங்கம் எடுத்த முடிவு: தமிழ்நாடு அரசு செய்தால் நல்ல இருக்கும்!
புதுச்சேரியில் மறைந்த முன்னாள் பிரதமர் முதல் முதல்வர்கள் வரை அரசு விழா நடத்த முடிவு.
புதுச்சேரி அரசாங்கம் தற்போது மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருக்கு அரசு விழாவில் புதுச்சேரி அரசு நடத்தும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் சட்டசபையில் பேசிய முதலமைச்சரங்கசாமி அவர்கள் இது பற்றி கூறுகையில், அரசு ஊதியம் பெற்ற கடந்த ஆட்சியின் போது நீக்கப்பட்ட பணியாளர்கள் மீண்டும் இந்த ஆட்சியில் அரசு பணிகள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் அவர்களுக்கு அரசு வேலை தரப்படும் என்று அறிவித்து இருந்தார்.
மேலும் சட்டசபையில் இது குறித்து அவர் பேசுகையில், மத்திய அரசு உதவியோடு, உறுதுணையோடு அதிக நிதி பெற்று சிறந்த முறையில் செலவிட்டு புதுச்சேரியில் மற்ற மாநிலங்களை காட்டிலும் சிறந்து விளங்குவதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். மேலும் புதுச்சேரியில் தற்போது நடந்து வரும் முழுமையான பட்ஜெட் கூட்டத்தொடர் சிறந்த முறையில் நடந்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். புதுச்சேரி பொருத்தவரை நிர்வாக சீர்திருத்தத்தை கொண்டு வர வேண்டும் மேலும் அதனை கொண்டு வந்தால் விரிவான அரசு எண்ணங்களை நல்ல முறையில் செயலாற்றுவோம் முடியும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
மேலும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களின் கேள்விகளுக்கு முழுமையான விடைகளை அமைச்சர்கள் அளித்து இருக்கிறார்கள். பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க நிர்வாக சீர்திருத்தத்தில் அரசு முறையாக கவனம் செலுத்தி இருப்பதாகவும் முதலமைச்சர் ரங்கசாமி குறிப்பிட்டு இருந்தார். விரைவில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்பும் முயற்சியில் புதுச்சேரி அரசாங்கம் களம் இறங்கி இருப்பதாகவும், விரைவில் அவை நிரப்பப்பட்டு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
Input & Image courtesy: News