மாநிலங்களுக்கான அதிகாரத்தை மத்திய அரசு பறித்ததில்லை - ஹெச்.ராஜா

மாநிலங்களுக்கான அதிகாரத்தை மத்திய அரசு பறித்ததில்லை என்று பா.ஜ.க முன்னாள் தேசிய செயலாளர் கருத்து.

Update: 2022-08-23 08:37 GMT

மாநிலங்களுக்கான அதிகாரத்தை எப்போதும் மத்திய அரசை படித்ததில்லை என்று பா.ஜ.க முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்தார். காரைக்கால் மாநிலங்களுக்கான அதிகாரத்தை மத்திய அரசு பறித்து கொண்டது இல்லை என்று காரைக்காலை அடுத்த சத்திரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் பா.ஜ.க சார்பில் பிரதமர் மோடியின் சாதனை மற்றும் கனவுத் திட்டங்கள் குறித்த கருத்தரங்கம் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பா.ஜ.க முன்னாள் தேசிய செயலாளர் கீழ்க்கண்டவாறு தன்னுடைய கருத்தைப் பதிவு செய்துள்ளார்.  


மாநிலங்களுக்கான அதிகாரம் சிறந்த ஆட்சியை பிரதமர் நடத்தி வருகிறார். நோய்த் தொற்றில் கூட நம்முடைய பொருளாதாரம் 9 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது என்பது மோடி அவர்கள் நடத்திய ஆட்சியின் சிறப்புகளை கொண்டுள்ளது. பிரதமர் அவர்கள் நாட்டிற்காக எடுத்த செயல்கள் மற்றும் அது சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் குறித்து புத்தகம் தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். மாநிலங்களுக்கான அதிகாரத்தில் மத்திய அரசு பறித்ததில்லை. எந்த அதிகாரத்தை பறித்தது என்று மு.க. ஸ்டாலின் அவர்கள் பதில் சொல்ல முடியுமா? ஏதோ அரசை குறை கூற வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படி சொல்கிறார்கள். 


தங்களுடைய ஆட்சியில் உள்ள குறைகளை மறைப்பதற்கு மத்திய அரசு மீது பழி போட வேண்டும் என்பது ஒரே எண்ணம். புதுச்சேரியில் பா.ஜ.க நேரடியாக இல்லாததால் மத்திய அரசு புறக்கணிப்பது என்பது ஒரு அபாண்டமான பொய் செய்தி. தமிழகம், புதுச்சேரியில் பா.ஜ.க வளர்ச்சியை கண்களால் தற்போது பார்க்க முடிகிறது. எல்லா கட்சிகளிலிருந்தும் தொண்டர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். புதுச்சேரியில் முதலமைச்சர் அவர்களின் மாற்றம் அங்கு வளர்ச்சி கொண்டு வந்துள்ளது என்று கூறலாம். இவ்வாறு அவர் தன்னுடைய கருத்துகளை பதிவு செய்துள்ளார். 

Input & Image courtesy:Daily Thanthi

Tags:    

Similar News