புதுச்சேரி: கோர்ட்டுக்கு வருவோருக்கு எச்சரிக்கை... போலீசார் கண்காணிப்பு...
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் புதுச்சேரியில் பொது இடங்களில் தீவிர கண்காணிப்பு.
புதுச்சேரியில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் புதுவையில் உள்ள பொதுஇடங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாட்டில் தற்பொழுது அதிகமாக அளவில் பிரச்சனைகள் நோய் தொற்று அபாயம் இருந்து வருகிறது. நாளுக்கு நாள் நோய் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து தான் வருகிறது. குறிப்பாக வயதானவர்களிடம் இந்த நோய் தொற்று எளிதாக பரவும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதன் காரணமாக புதுச்சேரியில் கோர்ட்டுகளில் முக கவசம் அனைவரும் கட்டாயம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டிருக்கிறது. இதை கடைபிடிப்பதற்காக அங்கு இருக்கும் காவல்துறையினர் அனைவருடைய பாதுகாப்பையும் உறுதி செய்து வருகிறார்கள். கோர்ட்டுகளில் அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும் என்று ஐகோர்ட்டும் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் கோர்ட்டுக்கு வருபவர்கள் முகக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி புதுவை தலைமை நீதிபதி செல்வநாதன் கடந்த சில நாட்களுக்கு முன்பு முகக்கவசங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த ஒரு நிலையில் இன்று புதுவை கோர்ட்டுக்கு முகக்கவசம் அணிந்து வருகிறார்களா? என்று போலீசார் கண்காணித்தனர். முகக்கவசம் அணியாதவர்களை முகக்கவசம் வாங்கி அணிந்து வருமாறு அறிவுறுத்தினர்.
Input & image courtesy: Dinamalar