புதுச்சேரி: வருமானவரி ஆலோசனைக் குழு கூட்டம்.. மத்திய அரசின் முயற்சிக்கு பாராட்டு..

Update: 2023-07-16 05:12 GMT

புதுச்சேரி மண்டலத்தின், மண்டல நேரடி வரிகள் ஆலோசனைக் குழுவின் (RDTAC) கூட்டம் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் நடைபெற்றது. அதில், மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். சஞ்சய் குமார் வர்மா, வருமான வரி முதன்மை தலைமை ஆணையர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, மண்டலத்தின் மற்ற மூத்த வருமான வரி அதிகாரிகள் மற்றும் குழுவின் பிற உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


RDTAC ஆனது நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ்நாடு அரசாங்கத்தின் நியமன உறுப்பினர், வணிகம், வர்த்தகம், தொழில்கள் மற்றும் கணக்குகள் போன்ற வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைக் உள்ளடக்கியதாகும். சஞ்சய் குமார் வர்மா, தனது வரவேற்புரையில், வரி செலுத்துவோர் மற்றும் வருமான வரித் துறைக்கு இடையே பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவதும், ஊக்குவிப்பதும், பொதுவான நிர்வாக மற்றும் நடைமுறை சிக்கல்களை நீக்குவதுமே, இக்குழுவின் நோக்கம் என்று விளக்கினார்.


வரி செலுத்துவோருக்கு தரமான சேவைகளை வழங்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு, கணினிமயமாக்கல் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் போன்றவை பேருதவியாக இருக்கும் என்று அவர் எடுத்துரைத்தார். வரி செலுத்துவோர் மற்றும் வருமான வரித்துறை இடையிலான நேரடி தொடர்புகளை குறைக்கும் பொருட்டு சமீபத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் வலியுறுத்தினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News