மத்திய அரசு வழிகாட்டுதலின்படி மின்சார வாகன கண்காட்சி நடத்தி அசத்தும் புதுவை அரசு!

புதுச்சேரியில் நாளுக்கு நாள் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக குறிப்பிட்டு இருக்கிறார்.

Update: 2022-12-03 05:30 GMT

மின்சார வாகனங்களை ஊக்குவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கையின் பெயரில் புதுச்சேரியில் புதுப்பிக்க தக்க எரிசக்தி முகமை சார்பில் காமராஜர் மணிமண்டபத்தில் மின்சார பயன்பாட்டை ஊக்குவிக்கும் கண்காட்சியை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் தொடங்கி வைத்தார். மேலும் புதுச்சேரியில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் முதல்வர் குறிப்பிட்டு இருக்கிறார்.


இந்த விழாவுக்கு அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். மின்சார வாகன கண்காட்சியை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் ரங்கசாமி பார்வையிட்டார். மேலும் இந்த கண்காட்சி நிகழ்ச்சியை திறந்து வைத்த முதலமைச்சராக சாமி அவர்கள் பத்திரிக்கையாளர் பேட்டியின் போது கூறுகையில், வங்கி கடன் காற்று மாசு இல்லாத சூழலை உருவாக்க பயன்படும். மின்சார வாகனங்களுக்கு அதிக அளவில் வழங்கப்படுகிறது. குறிப்பாக சுற்றுலா நகரமான புதுவையில் புகையில்லா சூழலை உருவாக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி இந்த கண்காட்சி நடத்தப்பட்டு இருக்கிறது.


மேலும் மின்சார வாகனங்களின் பராமரிப்பு செலவு மிகவும் குறைவுதான். குறைந்த மின் செலவில் அதிக தூரம் செல்ல முடியும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் வாகனம் பயணம் செய்யும் பொழுது பாதுகாப்பான உணர்வு இருக்கும் புதுச்சேரியை பொறுத்தவரை மின்சார பயன்பாட்டு வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் இதை அதிகரிக்க வங்கிகள் மூலம் கடன் வழங்குவாய்ப்புகளும் தற்போது உருவாக்கப்பட்டு வருவதாக முதல்வர் குறிப்பிட்டார்.

Input & Image courtesy: Thanthi News

Tags:    

Similar News