புதுச்சேரி: சர்வதேச யோகா திருவிழா தொடக்கம் கோலாகலாம்!

புதுச்சேரியில் இன்று சர்வதேச யோகா திருவிழா தொடங்கியிருக்கிறது.

Update: 2023-01-05 04:03 GMT

புதுச்சேரியில் சர்வதேச யோகா தினம் புதன்கிழமை ஜனவரி 4ஆம் தேதி இன்று தொடங்கி வரும் ஏழாம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ஆண்டுதோறும் புதுவை அரசு சார்பில் ஜனவரி மாதம் சர்வதேச யோகா திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. சுற்றுலா துறை சார்பில் நடைபெறும் இந்த யோகா திருவிழாவில் நடப்பு ஆண்டிற்கான தொடக்க விழா நிகழ்ச்சிகள் புதன்கிழமை கருவாடி குப்பத்தில் உள்ள காமராஜர் மணி மண்டபத்தில் மாலை 6:00 மணிக்கு மேல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடப்பட்டது.


இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் சிறப்பு விருந்தாக கலந்து கொண்டு இந்த ஒரு நிகழ்ச்சியை தொடங்கி இருக்கிறார். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் யோகாவிற்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் ஒரு சூழ்நிலையில் புதுச்சேரியில் இது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக பார்க்கப்படுகிறது. இந்த விழாவிற்கு முதல்வர் ரங்கசாமி தலைமை வகிக்கிறார்.


மேலும் சட்டப்பேரவை தலைவர் செல்வம் பொதுத்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் முன்னிலையில் வகிக்கிறார்கள்.மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி, மக்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினர் ஜான் குமார் மற்றும் அரசியல் சுற்றுலா துறை செயலாளர் ஆகியோர் இந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News