தனியார்மயமாவது பற்றி காங்கிரஸ் பேச தகுதி இல்லை.. மத்திய அமைச்சர் கொடுத்த வார்னிங்.. .

தனியார் மயம் குறித்து பேச காங்கிரசுக்கு தகுதி கிடையாது என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் எச்சரிக்கை.

Update: 2023-05-31 04:51 GMT

தனியார்மயம் குறித்து பேச காங்கிரசுக்கு தகுதி கிடையாது என்று மத்திய அமைச்சர் L. முருகன் கூறினார். புதுச்சேரியில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிக்கு மாநில பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளரும் மற்றும் மத்திய அமைச்சருமான இருமுருகன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி இருக்கிறார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்தியில் அமைச்சர் என்னுடைய சிறப்பு பேட்டி ஒன்றை அளித்து இருக்கிறார். பிரதமராக மோடி பதவியேற்று 9 ஆண்டுகளில் நாடு மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் தேசிய அளவில் 4 கோடி வீடுகளும், புதுச்சேரியில் 14 ஆயிரம் வீடுகளும் கட்டிக்கொடுக்கப் பட்டுள்ளன. ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு வீட்டுக்கும் சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.


பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் பயனாளிகளுக்கு 100 சதவீத திட்டங்கள் சென்று மக்களை பயனடைய செய்து இருக்கிறது. கொரோனா காலத்தில் அனைவருக்கும் உணவளிக்கும் வகையில் 80 கோடி பேருக்கு மாதந்தோறும் 5 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு உள்ளிட்டவை வருகிற டிசம்பர் மாதம் வரை ரேஷனில் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தமிழர்களுக்கு மகத்தான இனி வரும் கொடுக்கும் வகையில் தற்போது புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழர்களின் கலாச்சாரம் முன்னிலைப்படுத்தப்பட்டு இருக்கிறது.


இது தமிழர்களுக்கான கவுரவம். பிரதமரின் தொலைநோக்கு நடவடிக்கையால் வருகிற 2047-ம் ஆண்டில் நம் நாடு மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும். காங்கிரஸ் புதிய ஆட்சி காலத்தில் தான் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டது என்பதை மறந்து விடக்கூடாது. எனவே தனியார்மயம் குறித்து காங்கிரஸ் பேசுவதற்கு எப்பொழுதும் தகுதி அல்ல என்று கூறி இருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News