புதுச்சேரி: இப்படியும் மோசடி நடக்குமா.. ரூ.16½ லட்சத்தை பறி கொடுத்த தனியார் ஊழியர்!

புதுச்சேரியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.16½ லட்சம் மோசடி.

Update: 2023-04-07 02:44 GMT

புதுச்சேரி கரையாம்புத்தூரை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன் என்பவர். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். இவருடைய whatsapp நம்பருக்கு ஒரு குறுந்தகவல் வந்து இருக்கிறது. அதில் வட மாநிலத்தைச் சேர்ந்த கரீனா என்ற பெண் அறிமுகமாகி இருக்கிறார். அவர் தான் பெரிய கம்பெனியில் நல்ல ஒரு நிலைமையில் மேலதிகாரியாக வேலை செய்வதாகவும் கூறி இருக்கிறார்.


தனக்கும் அந்த நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகளை கூறி அவரிடம் பணம் பறிக்கும் முயற்சிகள் ஈடுபட்டு இருக்கிறார். இது குறித்து ஒன்று அறியாத அவர் பல்வேறு கணக்குகளில் பணத்தை போட்டு இருக்கிறார். இதற்காக பல்வேறு தவணைகளாக வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு ரூ.16 லட்சத்து 52 ஆயிரத்து 997 அனுப்பினார். ஆனால் கரீனா கூறியபடி வேலையும் கொடுக்கவில்லை. மன உளைச்சல் அடைந்த அவர் இறுதியாக போலீஸ் இடம் தொடர்பு கொண்டு இத்தகைய தகவல்களை தெரிவித்து இருக்கிறார்.


எனவே தான் இழந்ததை மீட்டு தர வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசாரிடம் வழக்கு ஒன்றையும் பதிவு செய்து இருக்கிறார். மேலும் புதுவை சைபர் கிரைம் போலீசார் இது போன்ற பல்வேறு வழக்குகளை விசாரித்து வருகிறார்கள். குறிப்பாக அவர்கள் இதுபற்றி கூறுகையில், அடையாளம் தெரியாத நபர்கள் உங்களை தொடர்பு கொள்ள முயற்சிக்கும் பொழுது அவர்களுக்கு தனிப்பட்ட விவரங்களை பகிர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News