புதுச்சேரி: ரூ.9 லட்சம் மதிப்பில் 175 பயனாளிகளுக்கு செவித்திறன் கருவி!
புதுச்சேரியில் ஒன்பது லட்சம் மதிப்பில் 175 செவித்திறன் குறைவு கொண்ட நபர்களுக்கு கருவி வழங்கப்பட்டு இருக்கிறது.
புதுச்சேரியில் உள்ள இலவசமாக மருத்துவ முகாம்கள் அங்கு இருக்கும் மக்களுக்காக நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்த மருத்துவ முகாம்கள் மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறதோ, அதற்கு ஏற்ற வகையில் தீர்வுகள் உடனடியாக வழங்கப்பட்டு இருக்கிறது. பா.ஜ.க தலைமையிலான அரசாங்கம் புதுச்சேரியில் ஆட்சி அமைத்த பிறகு பல்வேறு சலுகைகள் மக்களுக்கு உடனடியாக கிடைத்துக் கொண்டு வருகிறது. அந்த வகையில் இலவசமாக நடந்த மருத்துவ பரிசோதனை முகாமில் செவித்திறன் பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் 175 பேருக்கு செவித்திறன் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு செல்வகணபதி எம்.பி.யின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து செவித்திறன் கருவி வழங்கும் நிகழ்ச்சி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் நடைபெற்று இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் மூலமாக சுமார் 175 பயனாளிகள் பயனடைந்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் ரூ.9 லட்சம் மதிப்பில் 175 பேருக்கு நவீன செவித்திறன் கருவிகளை செல்வகணபதி MP வழங்கினார். நிகழ்ச்சியில் ஜான்குமார் எம்.எல்.ஏ., சமூக நலத்துறை இயக்குனர் குமரன், துணை இயக்குனர் கலாவதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Input & Image courtesy: Dinamalar