புதுச்சேரி : ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக 200க்கும் மேற்பட்ட பாஜக மகளிர் அணியினர் சட்டமன்றத்தை முற்றுகை.!

புதுச்சேரி : ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக 200க்கும் மேற்பட்ட பாஜக மகளிர் அணியினர் சட்டமன்றத்தை முற்றுகை.!

Update: 2020-11-10 09:35 GMT

புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் அரசு மக்கள் நலத்திட்டங்காளை செயல்படுத்தவில்லை எனக்கூறி பாஜக சார்பில் பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் ம் இந்நிலையில் மாநில பாஜக மகளிர் அணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

காமராஜர் சிலை அருகில் இருந்து தொடங்கிய பேரணியில் 200க்கும் மேற்பட்ட பாஜக மகளிர் அணியினர் கையில் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு சட்டசபை நோக்கி ஊர்வலமாக வந்தனர். சட்டசபை அருகே வந்தபோது தலைமை தபால் நிலையம் முன்பு தடுப்புகளை போட்டு போலீசார்  தடுத்து நிறுத்தினர் இதனையடுத்து மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை மாநில முழுவதுமாக நடைமுறைபடுத்த வேண்டும், இலவச அரிசி வழங்க வேண்டும், தீபாவளி பண்டிகையை ஓட்டி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூபாய்-2ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிக்கோரி ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக கண்டன முழுக்கங்களை எழுப்பினர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது மேலும் போராட்டம் காரணமாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

Similar News