புதுச்சேரி மத்திய அரசின் திட்டத்தில் 100% நிதியை வழங்க வேண்டும் - ஆளுநர் வலியுறுத்தல்!

மத்திய அரசின் பங்களிப்பு திட்டங்களில் புதுச்சேரிக்கு 100 சதவீத நிதி வழங்க வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தினார்.

Update: 2022-09-05 00:17 GMT

புதுச்சேரியில் மத்திய அரசின் பங்களிப்பு திட்டங்களில் 100% நிதியை வழங்க வேண்டும் என்று புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். நேற்று நடந்த கவுன்சில் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் திருவனந்தபுரத்தில் தென்மண்டல கவுன்சில் கூட்டம் உள்துறை மந்திரி அமித்ஷா அவர்கள் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தென் மாநிலங்களில் மிகவும் சட்டம் ஒழுங்கு நிலைமை, உள்கட்டமைப்பு, சுகாதாரம்,பெண்கள் பாதுகாப்பு, மாநிலங்களுக்கு இடையிலான அமைதி உள்ளிட்ட பல்வேறு தரப்புகளுக்கு விவாதம் நடந்தது.


இந்த கூட்டத்தில் உரையாற்றிய புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் மாநிலங்களுக்கு இடையான பிரச்சனைகளை தீர்க்க இதுபோன்ற கூட்டங்களை போதிய இடைவெளியில் நடந்த நடக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்துக்கு தமிழக பகுதியில் இருந்து 395 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதன் மூலம் அருகில் உள்ள கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் அனைத்தும் பயன் பெறும். அதே போல் காரைக்கால் பகுதியில் இருந்து புதுச்சேரிக்கு மணல் கொண்டு வர தமிழக அரசு அனுமதி தர வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.


அதேபோல புதுச்சேரி கடலோரப் பகுதி என்பதால் நிலத்தடி நீர் எடுப்பது என்பது சற்று கடினமான செயலாகவே இருக்கின்றது. தற்போதைய நிலவரப்படி 5.75 DMC தண்ணீர் தேவைப்படுகிறது. 2040ல் இந்த தேவை 7 DMCயாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே வராகிநதி, தென்பொன்னை ஆறு, கோதாவரி, காவிரி இணைப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்று என்று கூறினார். மேலும் விநாயகர் சிலை கடலில் கரைப்பு 100 சதவீத நிதி உதவி யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மத்திய நிதி குழு சேர்க்கப்படவில்லை. மத்திய அரசின் பங்களிப்புத் திட்டங்களுக்கும் 100% நிதியை வழங்க வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy:Dailythanthi News

Tags:    

Similar News