புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் எப்பொழுது தெரியுமா ?

Pondicherry Budget.

Update: 2021-08-20 00:32 GMT

புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 26-ம் தேதி கூடுகிறது. அன்றைய தினம் கவர்னர் உரை இடம்பெறும். தொடர்ந்து பிற்பகலில் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறும் என்று சபாநாயகர் செல்வம் அறிவித்தார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. 

இதுதொடர்பாக புதுச்சேரி சட்டசபை செயலாளர் முனுசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

15-வது புதுச்சேரி சட்டசபை வரும் 26-ம் தேதி (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை அலுவலகத்தில் மீண்டும் கூடுகிறது. அப்போது கவர்னர் உரை நிகழ்த்துகிறார் என அதில் கூறப்பட்டுள்ளது.

Image : Indian Express

Maalaimalar

Tags:    

Similar News