புதுச்சேரி: கள்ளச்சாராய மரண எதிரொலியாக போலீசார் தீவிர கண்காணிப்பு..
சாராய கடைக்காரர்களுக்கு போலீசார் விடுத்த எச்சரிக்கை.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த 13 பேர் இறந்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகம், புதுச்சேரியில் மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தொடர்ச்சியான வகையில் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. கள்ளச்சாராய உயிர் இழப்புகளை தடுத்துவதற்கு நாம் அதனுடைய வழங்களை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். அதிலும் கள்ளச்சாராயம் புதுச்சேரியிலிருந்து கடத்திச் செல்லப்படுவதாக தகவல்கள் வெளியாகி வந்து இருக்கிறது.
இதன் காரணமாக கள்ளச்சாராய தயாரிப்பு புதுச்சேரியில் எங்கு நடைபெறுகிறது? மேலும் அவற்றை தடுப்பதற்கு புதுச்சேரி போலீசாரும் காவல்துறையும் தொடர்ந்து தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் சாராயக்கடைகளிலும் அவ்வப்போது ஆய்வு நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் வடக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது அலுவலகத்தில் சாராயக் கடைக்காரர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், ஜெய்சங்கர், சத்யநாராயணா மற்றும் சாராயக்கடை உரிமையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
குறிப்பாக நடைபெற்ற இந்த ஒரு கூட்டத்தில் சாராய விற்பனை தொடர்ப நடைமுறையில் உள்ள விதிமுறைகளை போலீசார் விளக்கி கூறினார்கள். எனவே கள்ளச்சாராய உயிர் இழப்புகளை தவிர்ப்பதற்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: News