புதுச்சேரியில் தூர்ந்து போன துறைமுகம்: அதற்கு தீர்வு இது மட்டும் தான்!

புதுச்சேரியில் துறைமுகங்கள் சோர்ந்து போவதற்கு நிரந்தர தீர்வு இது மட்டும் தான்.

Update: 2023-04-11 03:48 GMT

துறைமுகங்கள் ஆற்று முகத்துவாரங்கள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கின்றன, கப்பல்களை துறைமுகத்தின் அருகில் கொண்டு வர முடிகிறது. ஆனால் புதுச்சேரி துறைமுகத்தில் மட்டும் பல கோடி செலவு செய்து முகத்துவாரங்களில் குவியும் மணல்களை அப்புறப்படுத்துவதை தங்களுக்கு பெரிய வேலையாக இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண்டெய்னர் சரக்கு கப்பல் போக்குவரத்து துவங்கி உள்ள நிலையில் தற்போது தரை தட்டி தடுமாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. எனவே பல துறைமுகம் முக துவாரங்களில் தொடர்ந்து மணல் அடைபடாமல் கப்பல்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனால் புதுச்சேரியில் மட்டும் இந்த ஒரு பிரச்சனை இருந்து வருகிறது. இதற்கு வல்லுனர்கள் தரப்பில் கூறுவது என்ன என்று கேட்கப்பட்டது? அப்பொழுது தமிழ்நாடு அரசு தேசிய நெடுஞ்சாலை தலைமை பொறியாளர் சுவாமி ராஜா அவர்கள் இதற்கு பதிலை அளித்து இருக்கிறார்.


குறிப்பாக அவர் கூறும் பொழுது, ஆற்றின் போக்கை முறைப்படுத்தினால் குறிப்பாக ஆறு கடலில் கலக்கும் இடத்தில் வாயிலைக் குறுக்கி முறைப்படுத்தும் போது இது சாத்தியமாகிறது. இந்த முறையில் ஆற்றுக்கு அதன் ஒதுக்கப்பட்ட பாதையில் தண்ணீர் செல்வதற்கு அனுமதிக்கப்படுகிறது. அதனால் இந்த தொழில் மொத்தத்தில் ஆற்று பயிற்சி வேலை திட்டம் என்று அழைக்கப்படுகிறது என்றும் கூறினார். குறிப்பாக ஆற்றின் கறைகள் பாதுகாப்பாக கட்டப்பட்டிருந்தால் ஒரு கால்வாய் போன்ற ஆறு திட்டமிட்ட பாதையில் செல்லும் பொழுது ஆற்றின் ஆழமும் அதிகரிக்கும் வேகமும் அதிகரிக்கும். இந்த நிலை காரணமாக முகத்துவாரம் வரை நீடிக்கப்பட்டு இருக்கும் பொழுது கடல் ஆறு கடலில் மிக வேகத்துடன் சென்று கலக்கும்.


அதே நேரத்தில் அங்கி சேர்ந்திருக்கும் மணலையும் கரைத்து எடுத்துக்கொண்டு மறுபடியும் ஆற்றின் உள்ளே சேர்த்து விடும். எனவே முகத்துவாரம் அடிபடாது ஆனால் அப்பொழுது துவாரங்கள் கட்டமைக்கப்படவில்லை என்றால் இந்த மாதிரியான பிரச்சினைகள் அதிகமாக இருக்கக்கூடும் என்று கூறியிருக்கிறார். எனவே இந்த ஆற்றுப் பயிற்சி வேலை திட்டத்தின் படி, புதுச்சேரியில் உள்ள எல்லா ஆறுகளும் கரைகள் வடிவமைக்கப்பட்டு முறையாக ஆற்றின் கரையோரம் தொடர்ந்து நடைபெற்றால் கடல் அரிப்பு ஏற்படாது என்று ஆலோசனைகளை கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News