புதுச்சேரி: 9 கோடியில் நடைபெறும் சாலை சீரமைக்கும் பணிகள்.. தொடங்கி வைத்த முதல்வர்..

ஒன்பது கோடியில் சாலை சீரமைப்பு பணிகளை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்திருக்கிறார்.

Update: 2023-05-17 03:35 GMT

நெல்லித்தோப்பு, காமராஜ் நகர் தொகுதிகளில் ரூ.9 கோடியில் சாலை சீரமைக்கும் பணிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். ரூ.9 கோடி ஒதுக்கீடு. புதுவை நெல்லித்தோப்பு தொகுதி, காமராஜ் நகர் தொகுதியில் பழுதடைந்துள்ள 44 ஆயிரத்து 360 மீட்டர் நீளமுள்ள சாலைகள் மற்றும் குறுக்கு சாலைகளை சீரமைக்கும் பணிக்காக தற்பொழுது ஒன்பது கோடியே ஒன்பது லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. எனவே அந்த பணிகள் தற்பொழுது விரைவாக நடைபெற இருக்கிறது.


குறிப்பாக புதுச்சேரியில் நெல்லி தோப்பு தொகுதி, அண்ணாநகர், சத்யா நகர், திருமால் நகர், ராஜராஜேஸ்வரி நகர், ரெயின்போ நகர், எழில் நகர், கிருஷ்ணா நகர், கருவாடி குப்பம், சூரியகாந்தி நகர், வசந்தா நகர், திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்னும் ஒரு பணிகள் நடைபெற இருக்கிறது. குறிப்பாக இந்நகையை இடங்களில் சாலை சீரமைப்பு பணிக்காக ஒன்பது கோடியே ஒன்பது லட்சம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.


நெல்லித்தோப்பு தொகுதிக்கான பணிகளின் தொடக்க நிகழ்ச்சி காமராஜர் சாலையில் நடந்தது. அதுபோல் காமராஜ் நகர் தொகுதிக்கான பணிகள் தொடக்க நிகழ்ச்சி ரெயின்போ நகரில் நடந்தது. இரு நிகழ்ச்சிகளிலும் முதல்-அமைச்சர் ரங்கசாமி பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர் லட்சுமி நாராயணன் மற்றும் பல்வேறு எம்எல்ஏக்கள் பொதுத்துறை தலைமை பொறியாளர் ஆகியோர் இந்த ஒரு நிகழ்ச்சியில் உடன் இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News