புதுச்சேரி: கோலகலமாக கலைக்கட்டிய பாரம்பரிய உணவு திருவிழா!
புதுச்சேரி காரைக்காலில் தற்பொழுது கோலாகலமாக பாரம்பரிய உணவு மற்றும் விளையாட்டு திருவிழா நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியில் உள்ள காரைக்காலில் மாவட்ட சமுதாய நலப்பணித் திட்டம் சார்பில் காரைக்கால் பெரும் தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரியில் பாரம்பரிய உணவு மற்றும் விளையாட்டு திருவிழா நடைபெற்றது. குறிப்பாக இந்த விழாவை மதுரை மாவட்ட துணை கலெக்டர் பாஸ்கரன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து இருக்கிறார். இதில் மாவட்ட மேல்நிலைக் கல்வி துணை இயக்குனர் ராஜேஸ்வரி, முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் கல்லூரி முதல்வர்கள் என பலரும் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்து வரவேற்பு அளித்திருக்கிறார்கள்.
மத்திய அரசாங்கம் தற்போது இளைஞர்கள் மத்தியில் சிறுதானியங்கள் குறிப்பான சத்தான சிறுதானியங்கள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு முனைப்புடன் பல்வேறு மாநிலங்களில் ஆங்காங்கே கண்காட்சி ஏற்படுத்தி சிறுதானிய உணவுகள் பற்றி நன்மைகளை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் புதுச்சேரியில் பல்வேறு சிறு தானிய முகாம்கள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தொடங்கிய இந்த ஒரு நிகழ்ச்சியில் மாணவர்களுக்கிடையே சத்தான உணவுகள் மற்றும் சிறுதானியங்கள் பற்றி உங்களுக்கு உணர்வு ஏற்படுத்த இந்த பாரம்பரிய தலைவர் ஏற்பாடு செய்ததாகவும் பாரம்பரிய விளையாட்டு ஆன கிட்டிப்புல், பல்லாங்குழி, பம்பரம், உரியடி, கபடி, தாயம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை பற்றியும் விரிவாக கூறப்பட்டது. இந்த ஒரு நிகழ்ச்சிகள் 12 பள்ளிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்து கொண்டார்கள்.
Input & Image courtesy: News