புதுச்சேரி: சென்டாக் கலந்தாய்வு.. மாணவர்கள் விண்ணப்பிப்பது தொடங்கியது..

நீட் தேர்வு அல்லாது இளங்கலை மற்றும் இளநிலை படிப்புகளுக்கான சென்டாக் கலந்தாய்வு தொடங்கியது.

Update: 2023-05-20 03:12 GMT

நீட் நுழைவுத்தேர்வு அல்லாத இளநிலை, இளங்கலை படிப்புகளில் சேர சென்டாக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பது நேற்று முதல் தொடங்கியுள்ளது. சென்டாக் விண்ணப்பம் செய்ய புதுவையில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் அரசு இடஒதுக்கீட்டில் சேருவதற்கான மாணவர் சேர்க்கை சென்டாக் மூலம் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. தற்போது பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையில் சென்டாக்கிற்கு விண்ணப்பிப்பது தொடங்கப்படாமல் இருந்தது. விரைவாக மாணவர் சேர்க்கையை தொடங்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ச்சியான வந்து கொண்டிருந்தது.


அதன் காரணமாக தற்போது உயர்நிலை மாணவர் சேர்க்கைக்கு சென்டாக்கில் விண்ணப்பிப்பது நேற்று தொடங்கியது. இது தொடர்பாக கல்வித்துறை பொறுப்பு வகிக்கும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். நீட் தேர்வு அல்லாத படிப்புகள் 2023ம் கல்வியாண்டிற்கான நீட் அல்லாத இளநிலை தொழில்முறை படிப்புகளான பி.டெக், பி.எஸ்சி, பிசியோதெரபி, பி.பார்ம், பி.ஏ. எல்.எல்.பி, மற்றும் பட்டய படிப்புகள், இளங்கலை அறிவியல் மற்றும் வணிக படிப்புகள் (பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ.) மற்றும் இளநிலை நுண்கலை படிப்பு களுக்கு www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் சமர்ப்பிக்கலாம்.


இந்த செயற்கைக்கான விண்ணப்ப பதிவு தற்போது தொடங்கி இருக்கிறது. விண்ணப்பங்கள் தற்போது இருந்து ஜூன் மாதம் ஆறாம் தேதி வரை பெறப்படுகிறது. அதுவரை மாணவர்கள் இத்தகைய படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப் பட்டிருக்கிறது.

Input & Image courtesy: Thanthi News

Tags:    

Similar News