சுத்தமான கடற்கரை, பாதுகாப்பான கடல் பிரச்சாரம் - புதுச்சேரி ஆளுநர் தமிழிசை, மத்திய அமைச்சர் பங்கேற்பு!
புதுச்சேரி சின்ன வீரம்பட்டினத்தில் உள்ள கடற்கரை பிரசாரத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் மற்றும் ஆளுநர் கலந்து கொண்டார்.
மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சராக பிரகாஷ் ஜவடேகர் அவர்களும், மற்றும் புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் இன்று காலை ஆறு மணி அளவில் புதுச்சேரி சின்ன வீரம் பட்டினத்தில் உள்ள புரோமனேட் கடற்கரையில் ஸ்வச்ச்சாகர் சுரக்ஷித்சாகர் பிரச்சாரத்தின் ஓவியப் போட்டியின் படங்களைப் பார்வையிட்டார்.
ஏனெனில் மத்திய அரசு தற்போது சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்காக குறிப்பாக கடலில் சேர்க்கப்படும் திடக்கழிவுகள் மேலாண்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. பெரும்பாலும் கடலில் மூழ்கும் குப்பைகள் மீளாத தன்மையை ஏற்படுத்தி கடலுக்கு இழப்புகளை ஏற்படுத்துகிறது. இனியாவது இந்த நடவடிக்கையை நிறுத்துவோம், அடுத்து தலைமுறையினருக்கு தூய்மையான கடலை கொண்டு சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்காக மத்திய அரசு தொடங்கிய பிரச்சாரம் தான் ஸ்வச்ச்சாகர் சுரக்ஷித்சாகர்.
இவற்றின் ஒரு பகுதியாக மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவ நிலை மாற்றங்கள் துறை அமைச்சர் இன்று காலை 6 மணிக்கு புதுச்சேரி சின்ன வீரம்பட்டினத்தில் உள்ள புரோமனேட் கடற்கரையில் ஸ்வச்ச்சாகர் சுரக்ஷித்சாகர் பிரச்சாரத்தின் ஓவியப் போட்டியின் படங்களைப் பார்வையிட்டு, நீலக் கொடி சான்றளிக்கப்பட்ட புரோமனேட் கடற்கரையில் கடலோர சுத்தப்படுத்தும் பிரமிடு பற்றி விளக்கத்தை கேட்டு அறிந்தார்.
Input & Image courtesy: Twitter