சுற்றுலாத்துறை சார்பில் வணிக திருவிழா: தொடங்கி வைத்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி!
அரசு சுற்றுலாத்துறை சார்பில் வணிக திருவிழா நடைபெறுகிறது.
புதுச்சேரி அரசின் சார்பில் சுற்றுலாத்துறை மற்றும் புதுச்சேரி வணிக விழா சங்கம் ஒன்று சேர்ந்து தற்போது வணிகத் திருவிழாவை தொடங்கி இருக்கிறது. மேலும் இந்த வணிக திருவிழாவில் கலந்து கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.3.25 கோடிக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. காரைக்காலில் வணிக திருவிழா 2023 கொடுக்க விழாவில் புதுச்சேரி நேரு வீதி ராஜா திரையரங்கம் சந்திப்பில் தொடக்க விழா நடைபெற்றது இந்த விழாவை முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் சபாநாயகர் செல்வம் அமைச்சர் பலூர் தொடங்கி வைத்திருந்தார்கள்.
விழாவில் சுற்றுலாத்துறை இயக்குனர் பிரியதர்ஷினி புதுச்சேரி வணிக விழா சங்கத் தலைவர் அவர்களே கலந்து கொண்டார்கள்.ரூ.3.25 கோடிக்கு பரிசுவணிக திருவிழா அடுத்த மாதம் (பிப்ரவரி) 20-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி வாடிக்கையாளர்களுக்கு ரூ.3.25 கோடிக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.
இதில் ஒரு நபருக்கு 75 சவரன் தங்கமும், 20 பேருக்கு காரும், 40 பேருக்கு ஸ்கூட்டரும், 200 பேருக்கு செல்போன்களும், 2 ஆயிரம் பேருக்கு கிச்சன் செட்டும், 20 ஆயிரம் பேருக்கு பரிசுகளும் வழங்கப்படுகின்றன. மேலும் இந்த வணிகத் திருவிழாவிற்கான இறுதிப் போட்டி பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: News