மாண்டஸ் புயல்: சென்னை- புதுச்சேரி பேருந்துகள் ரத்து போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

சென்னை வரும் புதுச்சேரி பேருந்துகள் ரத்து செய்து புதுவை போக்குவரத்து கழகம் அறிவிப்பு.

Update: 2022-12-10 03:09 GMT

மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பலத்த மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்து இருக்கிறது. மேலும் மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக கன மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. புயல் கரையை கடப்பதற்கு இன்னும் நாட்கள் இருப்பதால், போக்குவரத்து தற்போது ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


புயல் காரணமாக சென்னை வரும் புதுச்சேரி பேருந்துகள் நிறுத்தப்படுவதாக புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் இன்று இரவு மற்றும் நாளை அதிகாலைக்கு இடைப்பட்ட நேரத்தில் புதுச்சேரி- ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இந்த நிலையில் தமிழகத்தில் இன்று புயல் கரையை கடக்கும் பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என்று அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை வரும் புதுச்சேரி பேருந்துகள் தான் தற்பொழுது நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகம் சார்பில் தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதன்படி ECR சாலை வழியாக சென்னை வரும் புதுச்சேரி பேருந்துகள் மற்றும் காரைக்கால் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

Input & Image courtesy: Hindu News

Tags:    

Similar News