புதுச்சேரி பல்கலைக்கழகப் பொருட்கள் ஜப்தி... என்ன நடந்தது?

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள பொருட்கள் ஜப்தி செய்யும் முயற்சி.

Update: 2023-04-06 01:45 GMT

புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு நீதிமன்ற ஊழியர்கள் அங்குள்ள பொருட்களை ஜப்தி செய்ததன் காரணமாக அங்கு சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக அங்கு இருக்கும் உயர் நீதிமன்றத்தில்வழக்கு புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கடந்த 2009-ம் ஆண்டு கருத்தரங்கம் அமைக்க தனியார் நிறுவனம் மூலம் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் கருத்தரங்கம் கட்ட ஒதுக்கிய நிதி குறைவாக இருப்பதாகவும், கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தனியார் கட்டுமான நிறுவனம் கோரிக்கை விடுத்தது.


ஆனால் பல்கலைக்கழகம் நிர்வாகம் தொடர்ந்து இவர்களுடைய கோரிக்கைகளை ஏற்காமல் மறுத்து விட்டதால் தனியார் நிறுவனம் தற்போது புதுச்சேரியில் இருக்கின்ற உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்து இருக்கிறது. அதனுடைய முடிவு தான் தற்போது வெளியாகிய பரபரப்பை ஏற்படுத்துகிறது. இத்தகைய செயலுக்காக ரூ.4 கோடி 50 லட்சம் வழங்க வேண்டும் என்று பல்கலைக்கழகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் பல்கலைக்கழக நிர்வாகம் தவணை முறையில் இதுவரை ரூ.1 கோடியே 79 லட்சத்தை செலுத்தி உள்ளது.


மீதித் தொகையை செலுத்தாமல் காலம் கடத்தி வந்ததாக தெரியவருகிறது எனவே தவணைத் தொகையை வழங்காத காரணத்தினால் பல்கலைக்கழகப் பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. ஜப்தி செய்யும் முயற்சி கடந்த மாதத்திற்கான தவணை தொகையை வழங்காததால், கோர்ட்டு ஊழியர்கள் பல்கலைக்கழகத்தில் பொருட்களை ஜப்தி செய்ய சென்றனர். அவர்களை, பல்கலைக்கழக நுழைவாயிலில் இருந்த பாதுகாவலர்கள் உள்ளே விட மறுத்துவிட்டனர். இந்த நிலையில், கோர்ட்டில் செலுத்த வேண்டிய ரூ.40 லட்சத்தை இன்று பல்கலைக்கழக நிர்வாகம் செலுத்தி விட்டதாக ஊழியர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News