உலக சிட்டுக்குருவி தினத்தை நினைவுகூர்ந்த புதுச்சேரி முதலமைச்சர்: செய்த தரமான சம்பவம்!

புதுச்சேரியில் எட்டு அடி நீள சிட்டுக்குருவி கூட்டை திறந்து வைத்தார் புதுச்சேரி முதலமைச்சர்.

Update: 2023-03-21 01:24 GMT

மார்ச் 20 ஆம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் எட்டடி நீளம் கொண்ட செயற்கை சிட்டுக்குருவி கோட்டை புதுச்சேரி முதல் அமைச்சர் முதல் முறையாக திறந்து வைத்து இருக்கிறார். புதுச்சேரியில் தற்போது வரை ஆறு லட்சம் சிட்டுக்குருவிகள் இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறது. புதுச்சேரி முதலமைச்சர் அரங்கசாமி அவர்கள் தன்னுடைய இல்லத்தில் செயற்கை சிட்டுக்குருவி கூடுகளை திறந்து வைத்து இருக்கிறார். சிட்டுக் குருவிகள் மற்றும் அவற்றுக்கான பாதுகாப்பை ஏற்படுத்தும் விதமாக இன்றைய தினம் மக்களுக்கு அதனுடைய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டு மார்ச் 20ஆம் தேதி சிட்டுக்குருவி தினம் கொண்டாடப்பட்டது.


இது காரணமாக புதுச்சேரியில் சிட்டுக்குருவி ஆர்வாளர் ஆர்வலர் இளைஞர்கள், பசுமை இயக்கம் சிட்டுக்குருவி பாதுகாப்பு இயக்கம் தலைவர் அருண், எட்டடி நீளம் கொண்ட ஒரு அடி அங்குலத்தில் மரத்தால் செய்யப்பட்ட செயற்கை கோட்டை உருவாக்கினார். அவற்றை முதலமைச்சர் திறந்து வைத்தார். பதினாறு கூடுகள் உள்ள கூட்டிற்கு இரண்டு குருவிகள் விகிதம் 32 கூடுகள் ஒரே நேரத்தில் இதில் வசிக்க முடியும். இதனால் ஆண்டிற்கு 800 குருவிகள் வரை இனப்பெருக்கம் செய்ய முடியும் என்று கூறப்பட்டு இருக்கிறது.


மேலும் இவர் கடந்த 22 ஆம் ஆண்டுகளாக புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் இதுவரை 13 ஆயிரம் பேருக்கு 13,000 கூடுகளை வழங்கி இருக்கிறார். புதுச்சேரியின் முக்கியமான தலைமை செயலகம் அருகில் உள்ள கடற்கரை சாலைகளிலும் கூடுகளை வைத்து சிட்டுக்குருவிகளை பராமரித்து வருகிறார். புதுச்சேரி ரங்கசாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்ட சிட்டுக்குருவி கூடு தற்போது கோரி கோரிமேடு தன்வந்திரி நகர் காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: Indian Express

Tags:    

Similar News