தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் !

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடதமிழகத்தில் 19ம் தேதி மிகக் கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2021-09-17 06:10 GMT

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடதமிழகத்தில் 19ம் தேதி மிகக் கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 17ம் தேதி தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும பெய்யும். மேலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் பெய்யும்.

18ம் தேதி உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான முதல் கனமழையும் பெய்யும். மேலும், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் மற்ற கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் லேசானது மழையும் பெய்யும்.

19ம் தேதி புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Hindu Tamil


Tags:    

Similar News