மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு தரத்தை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்த முதலமைச்சர்!

Update: 2022-06-30 06:52 GMT

புதுச்சேரியில், பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் மாணவ, மாணவியருக்கு முட்டையுடன் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது பெங்களூரைச் சேர்ந்த ''அட்சய பாத்ரா'' என்ற அறக்கட்டளையுடன் இணைந்து புதுச்சேரி பகுதியில் உள்ள மாணவர்களுக்கு மதிய உணவு அளிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன்படி அந்த நிறுவனத்திற்கு லாஸ்பேட்டையில் அமைந்துள்ள மைய சமையற்கூடம் அட்சய பாத்ரா அமைப்புக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்படைக்கப்பட்டது. அதன்படி ஒப்பந்தம் கையெழுத்தாகி மூன்றரை ஆண்டுகளுக்கு பின்னர்தான் சமையல் பணிகள் தொடங்கப்பட்டது.

தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ரொட்டிப் பால், ஊட்டச்சத்து பானம், மதிய உணவு வழங்கும் திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டது. அரசு சார்பாக காலை ரொட்டி, பாலும் வழங்கப்பட்டு வருகிறது. அதனுடன் இணைந்து தனியார் அறக்கட்டளை மூலம் ஊட்டச்சத்து பானம் வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனியார் நிறுவனம் மீது தற்போது புகார் எழுந்துள்ளது. அதாவது மதிய உணவில் பூண்டு, வெங்காயம் போன்றவை சேர்க்கப்படாமல் ருசியில்லாமல் இருந்தது. இது பற்றி பொதுநல அமைப்பினர் சிலர் புகார் கூறினர்.

இந்நிலையில், அட்சயபாத்ரா அமைப்பினர் மாணவ, மாணவிகளுக்கு தயாரிக்கும் மதிய உணவை ஆய்வு செய்வதற்கு முதலமைச்சர் ரங்கசாமி முடிவு செய்தார். அதன்படி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டு பார்த்து அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகளை வழங்கினார். மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவுகளை கல்வித்துறை அதிகாரிகள் தினமும் சாப்பிட்டு பரிசோதனை செய்ய வேண்டும் என்ற பல்வேறு அறிவுரைகளை அவர் வழங்கினார்.

Source, Image Courtesy: News 18 Tamilnadu

Tags:    

Similar News