இறந்த நிலையில் கரை ஒதுங்கிய அரியவகை மீன்: வனத்துறை அதிகாரிகள் ஆய்வு!

Update: 2022-05-17 07:07 GMT

புதுச்சேரி வைத்திக்குப்பம் பகுதியை சேர்ந்த வளத்தான் என்ற மீனவர், நேற்று மாலை வைத்திக்குப்பம் கடற்கரையில் நின்று கொண்டிருந்தார். அப்போது கடலில் இருந்து கருப்பு நிறத்தில் மிதந்து வந்துள்ளது. இதனையடுத்து அதனை கரைக்கு இழுத்து வந்து பார்த்துள்ளார்.

அப்போது சுமார் 3 அடி நீளம் கொண்ட அரியவகை மீன் என தெரியவந்தது. இது பற்றி அவர் முத்தியால்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்து சம்பவ இடத்தில் பார்வையிட்டனர். இந்த ஆய்வின்போது வஞ்சுவல்லி மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர்.

ஆய்வு நடத்தியதில் கரை ஒதுங்கியது குளவி வேடன் இனத்தை சேர்ந்த மிகவும் அரியவகை மீன் என தெரியவந்தது. இதனையடுத்து மீனை ஆய்வு செய்வதற்காக வனத்துறை அதிகாரிகள் எடுத்து சென்றனர்.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News