குண்டு சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் அகற்றினர். இதனை எதிர்த்து குடியிருப்புவாசிகள் அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். புதுவை, மூலக்குளம் குண்டு சாலை பகுதியில் சாலை ஓரத்தில் பல் ஆண்டுகளாக ஏராளாமானோர்கள் ஆக்கிரமித்து வீடுகளை கட்டி குடியிருந்து வருகின்றனர். இதனிடையே மேட்டுப்பாளையம் போக்குவரத்து நகர் முதல் மூலக்குளம் வரையிலான சாலை விரிவாக்க பணிகள் தற்போது நடந்து வருகிறது.
மேலும், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை காலிசெய்யக்கோரி நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அங்கு வசித்து வருபவர்களுக்கு மாற்று இடத்தை அரசு வழங்கியது. ஆனால் பலர் இன்னும் வீடுகளை காலி செய்யாமல் அங்கேயே குடியிருந்து வருகின்றனர். இதற்கிடையில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற அதிகாரிகள் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னர் ஜே.சி.பி. இயந்திரத்துடன் சென்றனர். ஆனால் வீடுகளை இடிப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிகாரிகள் திரும்பி சென்றுவிட்டனர்.
இந்நிலையில், நேற்று (ஜூலை 12) மீண்டும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், போலீசாருடன் சென்று ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
Source, Image Courtesy: Daily Thanthi