புதுச்சேரி குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 1000: தமிழகத்தில் எப்பொழுது என ஆளுநர் தமிழிசை கேள்வி?
புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 கொடுக்கும் பொழுது தமிழகத்தில் கொடுக்கிறார்களா என்று கேள்வியை புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேட்டிருக்கிறார்.
புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு ஜனவரி மாதத்தில் இருந்து மாதம் ரூபாய் 1000 கொடுக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் இதுபோன்று கொடுக்கிறார்களா? இல்லையா? என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் கேள்வி எழுப்புகிறார். சென்னையில் விருகம்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் பொங்கல் விழாவை கொண்டாடினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அந்த பேட்டியின் போது அவர் குறிப்பிடுகையில், புதுச்சேரியில் மக்களுக்கு தங்கள் வாக்குறுதி அளித்தபடி மாதம் குடும்பத் தலைவிகளுக்கு அளிக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் இதுபோன்று நடக்கிறதா? இல்லை கொடுக்கிறார்களா? என்று ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார். மேலும் பேசிய அவர் கொரோனா பரவிய காரணத்தால் இரண்டு ஆண்டுகளாக பொங்கல் பண்டிகை சிறப்பாக மக்களால் கொண்டாடப் படவில்லை. ஆனால் இந்த ஆண்டு கடவுளின் ஆசிர்வாதத்துடன் தடுப்பூசி கண்டுபிடித்த பிறகு, அனைத்து மக்களும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட தொடங்கி இருக்கிறார்கள்.
அனைவரும் தங்கள் சொந்த ஊரில் பயணத்தை மேற்கொண்டு தற்பொழுது பொங்கல் விழா பண்டிகையை கொண்டாடுகிறார்கள். இதற்கு இறைவனின் நாம் பிராத்தனை செய்வோம். சீனா போன்ற நாடுகளில் கொரோனா பரவல் இன்னும் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையில் சுகாதார பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் போன்ற அனைவரின் முழு ஒத்துழைப்புடன் மக்கள் ஏன் பாதுகாப்பை உறுதி செய்து இருக்கிறோம்.
Input & Image courtesy: News