சௌராஷ்ட்ரா தமிழ் சங்கம்: புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்புரை!

சௌராஷ்ட்ரா தமிழ் சங்கத்தில் பங்கேற்றார் புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன்.

Update: 2023-04-19 02:00 GMT

குஜராத்தில் சௌராஷ்ட்ரா மற்றும் தமிழ் சங்கம் சங்கமும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி தொடக்க விழாவில் மத்திய ராணுவ அமைச்சர் மற்றும் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் சிறப்புரை நிகழ்த்தினார்கள். குறிப்பாக தமிழகத்திற்கும், உத்தரபிரதேசத்தின் வாரணாசிக்கும்படி உள்ள பழங்கால தொடர்புகளை புதுப்பிக்கும் விதமாக ஏற்கனவே மத்திய அரசு காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சியை தொடங்கியது.


அதேபோல் தற்போது குஜராத்திற்கும், தமிழகத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்புகளை வெளிப்படுத்தும் விதமாக சௌராஷ்டிரா தமிழ் சங்கம் நிகழ்ச்சி ஏற்பட செய்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது அவர் கூறுகையில் தமிழ்நாட்டில் மதுரை, பரமக்குடி, பாளையங்கோட்டை, திண்டுக்கல், சேலம், தஞ்சை, கும்பகோணம், திருக்கோணம் மற்றும் தேனி உள்ளிட்ட பல ஊர்களில் சௌராஷ்டிராகாரர்கள் தங்களுடைய கல்வி நிறுவனங்களை உருவாக்கி சேவை செய்து வருகிறார்கள். இதனால் தம் சமூகத்தில் படித்தவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகிறது.


குறிப்பாக டாக்டர்கள், என்ஜினியர்கள், ஆசிரியர்கள், விஞ்ஞானிகள் என அனைவரும் வளர்ந்து வருகிறார்கள். தாய் மொழி சௌராஷ்டிரா இருந்தாலும் பல நூற்றாண்டுகளாக அவர்கள் தமிழ் மீது அதிக பிரியத்தை கொண்டு இருக்கிறார்கள். தமிழ் மக்களோடு ஒன்றிய வாழ்க்கை இருப்பதால் தமிழ் மொழியை தங்களது மொழியாகவும் பாவித்து அவர்கள் தமிழ் வளர்ச்சிப் பணியை செய்து வருகிறார்கள் என குறிப்பிட்டு இருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News