இந்திய வளர்ச்சிக்கான அறிவியல் திட்டமிடல் - புதுச்சேரியில் G20-யின் செயல்பாட்டுக் குழு கூட்டம்!

அறிவியல் G20-யின் செயல்பாட்டுக் குழுவின் தொடக்கக் கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது.

Update: 2023-02-04 03:22 GMT

G20 நாடுகளின் தேசிய அறிவியல் அகாடமிகளை உள்ளடக்கிய S20 செயல்பாட்டுக் குழு, 2017 ஆம் ஆண்டு ஜெர்மனியின் பிரசிடென்சியின் போது தொடங்கப்பட்டது. இது சர்வதேச நிபுணர்களை உள்ளடக்கிய பணிக்குழுக்கள் மூலம் ஒருமித்த அடிப்படையிலான அறிவியல் சார்ந்த பரிந்துரைகளை கொள்கை வகுப்பாளர்களுக்கு வழங்குகிறது. ஆஸ்திரேலியா, பிரேசில், சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், இந்தியா, கொரியா குடியரசு, துர்கியே, ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய 11 G20 நாடுகளிலிருந்து மொத்தம் 15 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் தொடக்கக் கூட்டத்தில் பங்கேற்றனர்.


புதுச்சேரி G20 கூட்டத்தில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்களில் இருந்து சுமார் 50 பிரதிநிதிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களும் கலந்து கொண்டனர். பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி, G20 இன் தலைவராக இந்தியா, ஜி 20 ஐ உண்மையிலேயே "உள்ளடக்கிய, லட்சியமான, தீர்க்கமான மற்றும் செயல் சார்ந்ததாக" மாற்ற விரும்புகிறது. S20 இன் நிகழ்ச்சி நிரல், உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சிக்கான அறிவியலின் திட்டமிடல் மற்றும் பயன்பாட்டில் இந்தக் கொள்கையை பிரதிபலிக்கிறது.


2023 ஆம் ஆண்டிற்கான S20 இன் கருப்பொருள் “புதுமையான மற்றும் நிலையான வளர்ச்சிக்கு, மாற்றத்தை ஏற்படுத்தும் அறிவியல்”ஆகும். இந்த பரந்த கருப்பொருளில், கலந்துரையாடல்கள் மூன்று பகுதிகளில் கவனம் செலுத்தும்: பசுமையான எதிர்காலத்திற்கான தூய எரிசக்தி, உலகளாவிய முழு ஆரோக்கியம், அறிவியலை சமூகம் மற்றும் கலாச்சாரத்துடன் இணைப்பது ஆகியவை தொடர்பாக அடுத்தடுத்த கூட்டங்களில் விரிவாக விவாதிக்கப்படும்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News