புதுச்சேரிக்கு தனி கல்வி வாரியம்.. அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

தனி கல்வி வாரியம் அமைக்கக் கோரிய வழக்கில் புதுச்சேரி அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2021-09-18 12:02 GMT

தனி கல்வி வாரியம் அமைக்கக் கோரிய வழக்கில் புதுச்சேரி அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தமிழக அரசின் கல்வி முறையே பின்பற்றப்பட்டு வருகின்ற நிலையில், தனி கல்வி வாரியம் அமைக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீதர் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது 10வது மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு என்று தனி பாட திட்டத்தை வகுக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தனி கல்வி வாரியம் அமைப்பது மாணவர்களின் நலனுக்கு சிறந்தது என்றாலும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர். மேலும், இது தொடர்பாக கல்வித்துறை செயலாளருக்கு 4 வாரங்களில் புதிய மனுவை அளிக்குமாறு மனுதாரருக்கும், 12 வாரங்களில் மனுவை பரிசீலனை செய்து தகுந்த முடிவை எடுக்குமாறு புதுச்சேரி அரசுக்கும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

Source: News 7

Image Courtesy:The New Indian Express


Tags:    

Similar News