விபத்தில் சிக்கிய தாத்தா - தனி ஆளாக சாலையில் சீரமைத்த மாணவனுக்கு குவியும் பாராட்டு!
விபத்தில் சிக்கிய தாத்தா உடல் நிலை காரணமாக தனி ஒரு ஆளாக அந்த சாலை தற்போது சீரமைத்து உள்ளான் பள்ளி மாணவன்.
புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள சேர்த்த நத்தம் பகுதியில் சேர்ந்தவர் சேகர் என்பவர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு வில்லியனூர் சாலையில் சென்று பொழுது சாலையில் இருந்த பள்ளத்தில் அவரது மோட்டார் சைக்கிள் இறங்கி சரிந்தது. இதனால் கீழே விழுந்த வயது முதிர்ந்த அந்த நபருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்காக அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டிருக்கிறார்.
மேலும் இதனைக் கண்டு அவரது பெயரின் மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவனான மாசிலாமணி மிகவும் வேதனை அடைந்ததாக கூறப்படுகிறது. பிறகு அந்த சிறுவன் கட்டட இடுப்பாடு மீது மணலை கொண்டு தண்ணீர் ஊற்றி அந்த சாலையை சீர்படுத்தினான். அந்த மாணவன் அவரது செயலை கண்டு அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் தற்பொழுது அந்த சிறுவனை பாராட்டி செல்கிறார்கள். மாணவர் சாலையை சீரமைக்கும் பணி தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி பேச்சு பொருளாகி இருக்கிறது.
இந்த சாலையை சீரமைக்க கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு பூஜை போடப்பட்ட நிலையில் இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த மாணவனின் சிறிய வயதில் இத்தகைய பொதுநல செயல்கள் மிகவும் பாராட்டு கூறியது என மக்கள் கூறி வருகிறார்கள்.
Input & Image courtesy: Maalaimalar