தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு புதுவையில் 108 கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நாளை (ஏப்ரல் 24) நடைபெறுகிறது.
தேசிய பஞ்சாயத்துராஜ் தினம் நாளை (ஏப்ரல் 24) கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து நாளை கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பு கிராம சபை கூட்டங்களை நடத்த உள்ளாட்சித்துறை அறிவுரை வழங்கியுள்ளது.
இது குறித்து புதுவை உள்ளாட்சித்துறை துணை இயக்குனர் கிட்டி பலராம் சுற்றறிக்கை வெளியிட்டதில் கூறியிருப்பதாவது: புதுவை யூனியன் பிரதேசத்தில் 108 கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பு கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டும். இதில் பிரச்சிகைளை விவாதித்து இரண்டு தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Daily Thanthi