புதுவையில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி!

Update: 2022-03-25 02:34 GMT
புதுவையில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி!

அகில இந்திய கூடைப்பந்து சம்மேளனம் மற்றும் புதுச்சேரி கூடைப்பந்து கழகம் சார்பாக மாநில அளவிலான மூவர் கூடைப்பந்து போட்டி இன்று (மார்ச் 25) இந்தியாகாந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி வருகின்ற 27ம் தேதி வரை நடக்க உள்ளது.

இப்போட்டியில் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் 36 அணியும், பெண்கள் பிரிவில் 20 அணியும் பங்கேற்கிறது. சீனியர் பிரிவில் 53 ஆண்கள் அணியும், 15 பெண்கள் அணியும் பங்கேற்கிறது.

போட்டியில் வெற்றி பெறுகின்ற அணிக்கு முதல் பரிசாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதில் வெற்றி பெறும் அணிகள் பெங்களூருவில் நடைபெறுகின்ற தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Daily Thanthi

Image Courtesy:Dinasuvadu Tamil

Tags:    

Similar News