மாணவர்கள் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்: ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு!

Update: 2022-05-20 10:50 GMT

மாணவர்கள் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று என்.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் பேசியுள்ளார். புதுச்சேரி, காரைக்கால் அருகே உள்ள திருவேட்டக்குடியில் என்.ஐ.டி. (தேசிய தொழில்நுட்பக் கழகம்) செயல்பட்டு வருகிறது. அங்கு 8வது பட்டமளிப்பு விழா நேற்று (மே 20) நடைபெற்றது.

இதில் என்.ஐ.டி. இயக்குநர் சங்கரநாராயணசாமி வரவேற்றார். மொத்தம் 227 இளங்கலை மாணவர்கள், 32 முதுகலை மாணவர்கள், 17 ஆராய்ச்சி மாணவர்கள் என்று மொத்தம் 276 பேர் பட்டம் பெறுவதற்கு தகுதி பெற்றிருந்தனர். இதில் 112 பேருக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பட்டம் மற்றும் பதங்கங்களை வழங்கி கவுரவப்படுத்தினார்.


அதன் பின்னர் அவர் பேசியதாவது: தொழில்நுட்ப அறிவு கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில் கடினமான உழைப்பிற்கு பிறகு மாணவர்கள் பட்டத்தை பெறுகின்றனர். இதற்கு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பை பாராட்ட வேண்டும். மேலும், மாணவர்கள் புதிய தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். தற்போதைய போட்டிகள் நிறைந்த உலகத்தில் தொழில்நுட்ப அறிவு இன்றி எதையும் சாதிக்க முடியாது. இவ்வாறு ஆளுநர் தமிழிசை பேசினார்.

Source,Image Courtesy: Twiter

Tags:    

Similar News