புதுவை விமான நிலையம் விரிவாக்கம்: தொழில்நுட்ப குழு ஆய்வு!

புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வது பற்றி இந்திய விமான நிலைய ஆணையத்தை சேர்ந்த தொழில்நுட்ப குழுவினர் (டிசம்பர் 10) நேற்று ஆலோசனை நடத்தினர்.

Update: 2021-12-11 06:31 GMT

புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வது பற்றி இந்திய விமான நிலைய ஆணையத்தை சேர்ந்த தொழில்நுட்ப குழுவினர் (டிசம்பர் 10) நேற்று ஆலோசனை நடத்தினர்.

புதுச்சேரியில் விமான நிலையம் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாகும். புதுச்சேரியில் இருப்பவர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்றால் திருச்சி, அல்லது சென்னைக்கு விமான நிலையத்திற்கு போக வேண்டும். இதனால் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் நீண்டநாட்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், புதுவை லாஸ்பேட்டையில் விமான நிலையத்தின் ஓடுதளத்தை 3 ஆயிரத்து 330 மீட்டராக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி இந்திய விமான நிலைய ஆணையத்தின் தொழில்நுட்ப குழுவினர் நந்தகுமார், பிரபா, வாசிம், பால்லேந்திரகுமார் உள்ளிட்டோர் புதுவை விமான நிலையத்தில் நேற்று ஆலோசனை நடத்தினர். அப்போது புதுச்சேரி மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனிடம் ஆலோசனை நடத்தினர். அந்த ஆய்வின்போது உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Daily Thanthi


Tags:    

Similar News