ஏழை மக்களின் சன்டே மார்க்கெட்.. புதுச்சேரியின் ஸ்பெஷல்

ஏழை மக்களின் சன்டே மார்க்கெட்.. புதுச்சேரியின் ஸ்பெஷல்

Update: 2020-11-13 17:52 GMT

ஒவ்வொரு நகரத்திற்கும் ஒரு ஸ்பெஷல் எப்போதுமே இருக்கும். அது போன்று நாம்ம இப்போது பார்க்கின்ற புதுச்சேரிக்கும் உள்ளது. என்ன ஸ்பெஷல் என்று பார்ப்போம் வாங்க.

கிராமங்களில் வாரச்சந்தை கூடுவது வழக்கம். அது போன்று பிரெஞ்சு மக்கள் வாழ்ந்து வந்த நம்ம புதுச்சேரி நகரிலும் வாரச்சந்தை நடைபெறுகிறது. அது எந்த நாளில் நடைபெறும் என்றால் ஞாயிற்றுக்கிழமைகளில் சன்டே மார்க்கெட் கூடுவது வழக்கம். வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் முதல் அனைத்துமே இந்த சந்தையில் கிடைக்கும்.

புதுச்சேரி நகரின் முக்கிய வீதியான காந்தி வீதி மற்றும் நேரு வீதியின் இருபுறமும் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு ஒருநாள் முழுவதும் நடைபெறுவது வழக்கமாகும்.  இன்னும் பண்டிகை காலங்களில் இந்த வாரச்சந்தை கலைக்கட்டும் என்றே சொல்லலாம். அது போன்று தற்போது தீபாவளி பண்டிகை நேரத்தில் ஜோராக வியாபாரம் நடைபெறும்.

குறைந்த விலையில், தரமான பொருட்கள் கிடைப்பதால் உள்ளூர் மக்களும், வெளியூர் மக்களும் சன்டே மார்க்கெட்டில் ஷாப்பிங் செய்வதை வழக்கமாக கடைப்பிடித்து வருகின்றனர்.

பேன்சி பொருட்கள் தொடங்கி அனைத்துமே இங்கு கிடைக்கிறது. சுருக்கமாக சொல்லணும்னா சன்டே மார்கெட் ஓஎல்எக்ஸ்னு சொல்லலாம்.
ஒரு கஷ்டம்மருக்கு என்ன தேவை என்று கேட்டு ஒவ்வொரு வியாபாரியும் கேட்டு கேட்டு பொருட்களை கொடுப்பார்கள்.

தேவையானதா சொன்னா சட்டுன்னு கற்பூரமா புரிஞ்சுகிட்டு பொருளை எடுத்து கொடுத்திடுவாங்க. சுமார் 100க்கும் மேற்பட்ட கடைகளும், அதை வாழ்வாதாரமா நம்பி ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் உள்ளனர்.

புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள அஜந்தா சிக்னல் முதல் சின்ன மணிக்கூண்டு, புஸ்ஸி வீதி சந்திப்பு வரை சுமார் இரண்டு கிலோ மீட்டருக்கு சன்டே மார்க்கெட் கடைகள் அமைந்திருக்கும். ஜவுளிக்கடை, காய்கறி கடைகள், பேன்சி ஸ்டோர் உள்ளிட்ட கடைகள் ஒரே இடத்தில் அமைந்திருக்கும். இதனால் வாடிக்கையாளர்கள் அனைத்து வாங்கி செல்ல வசதியாகவும் அமைந்துள்ளது.

ஏழைகளின் ஷாப்பிங் மார்க்கெட் ஆக செயல்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் வியாபாரிகள் கடை போடாமல் கஷ்டப்பட்டதாகவும் கூறியுள்ளனர். எது எப்படியோ தற்போது மீண்டும் கொரோனா தொற்று குறைந்து வியாபாரிகளின் வாழ்கை தரம் உயர்கிறது.

Similar News