புதுச்சேரியில் தமிழ் வழி மருத்துவ கல்லூரி - டெல்லியில் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் ஆலோசனை!
புதுச்சேரியில் தமிழ் வழி மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அமைச்சருடன் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரியிலும் தமிழ் வழி மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவது குறித்து மத்திய அமைச்சருடன் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் ஆலோசனையில் ஈடுபட்டார். புதுச்சேரியில் தமிழ் வழி மருத்துவக் கல்லூரி தொடங்குவது குறித்து மத்திய அமைச்சருடன், கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் ஆலோசனை நடத்துவதற்காக அவர் டெல்லி சென்று இருக்கிறார். அங்கு நவம்பர் 1ஆம் தேதி தேசியப் போர் வீரர்கள் நினைவிடத்தில் அவர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக்கு மாண்டவியாவை சந்தித்து பேசினார்.
அப்பொழுது பல்கலைக்கழக ஒப்புதல்களுடன் புதுச்சேரியிலும் தமிழ் வழி மருத்துவ கல்லூரி தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தி முதலாம் ஆண்டு பாடத்திட்டத்தை தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பதற்கான பணிகள் மேற்கொண்டு வருவதாக கூறி, தற்போது உள்ள முதலாம் ஆண்டு மாணவர்கள் விருப்ப அடிப்படையில் தமிழ் வழியில் மருத்துவக் கல்லூரி தேர்வு முறையை தேர்வு செய்ய அறிமுகப்படுத்தப்பட இருப்பதும் குறிப்பிடத்தக்கது. புதுச்சேரியில் மருத்துவ பல்கலைக்கழகங்கள் தொடர்வதற்கான அனுமதி குறித்தும் கலந்த ஆலோசனை மேற்கொண்டார்.
மத்திய மந்திரியும் இதை உறுதி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று கூறி இருக்கிறார். மேலும் புதுச்சேரியில் அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளையும், போதைப்பொருள் மறுவாழ்வு மையங்கள், நோய் தொற்று மையங்கள் மருத்துவமனைகளை ஆகியவற்றை தொடங்குவது குறித்தும் பாதிக்கப்பட்டுள்ளது. பின்னர் தொடர்பான கடிதத்தை மத்திய அமைச்சர் பெற்றுக் கொண்டார். அதனைப் பெற்றுக் கொண்ட அவர் உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
Input & Image courtesy:Thanthi News