தென்பெண்ணை ஆற்றின் தடுப்பணை சீரமைப்பு பணியை நிறுத்திய தமிழக போலீஸ்!

புதுச்சேரி மாநிலம், பாகூரை அடுத்த கொம்மந்தான்மேட்டில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. அதில் தரைப்பாலமும் உள்ளது. இது பெரும்பாலான பகுதிகள் கடலூர் மாவட்டத்தில் வருவதாக கூறப்படுகிறது.

Update: 2021-12-31 05:12 GMT

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கடும் வெள்ளத்தால் சேதமடைந்திருந்த கொம்மன்தான்மேடு பகுதியில் தடுப்பணையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டவர்களை தடுத்து, அவர்களின் வாகனங்களை தமிழக போலீசார் பறிமுதல் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரி மாநிலம், பாகூறை அடுத்த கொம்மந்தான்மேட்டில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. அதில் தரைப்பாலமும் உள்ளது. இது பெரும்பாலான பகுதிகள் கடலூர் மாவட்டத்தில் வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சமீபகாலமாக பெய்த மழையால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது. இதனால் தடுப்பணை உடைந்து மிகப்பெரிய சேதத்திற்கு உள்ளானது. இதனை சீரமைக்கும் பணியில் புதுச்சேரி பொதுப்பணித்துறையினர் கடந்த 26ம் தேதி தொடங்கியிருந்தனர். இதற்காக ஜேசிபி மற்றும் டிராக்டர்கள் மூலம் மண் மற்றும் கற்கள் கொட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், கடந்த 29ம் தேதி தடுப்பணை வேலை செய்யும் இடத்திற்கு சென்ற கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி போலீசார் சென்றிருந்தனர். அப்போது வேலை செய்வதற்கான ஆவணங்கள் இருக்கிறதா என போலீசார் கேட்டுள்ளனர். அப்போது சரியான ஆவணங்கள் இல்லை என்று தொழிலாளர்கள் கூறியுள்ளனர். இதன் பின்னர் மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதியை வாங்கிவிட்டு பணியை செய்யுங்கள் என்று ஜேசிபி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் புதுச்சேரி பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய அனுமதியை வாங்குவதாக கூறிவிட்டு சென்றுள்ளனர்.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News