புதுச்சேரியில் தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்வு!

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் தொற்று பாதிப்பின் வேகமும் படிப்படியாக குறைந்து வருகிறது.

Update: 2021-12-08 05:53 GMT

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் தொற்று பாதிப்பின் வேகமும் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றை தடுக்கும் வகையில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன்படி தடுப்பூசி செலுத்தும் வேகமும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

அதே போன்று புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி செலுத்தும் பணிகளை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு வேகப்படுத்தி வருகின்றனர். 100 சதவீத தடுப்பூசி இலக்கினை எட்டுவதற்கு வீடு, வீடாக தடுப்பூசி போடுகின்ற பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது ஒமைக்ரான் என்ற உருமாறிய புதிய வகையிலான கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸை கண்டு பொதுமக்கள் அஞ்சு வருகின்றனர். இதனால் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் தொற்று ஏற்படாது என்ற எண்ணம் மக்களிடையே ஏற்பட்டு வருகிறது.

அது மட்டுமின்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க வேண்டும் என்றாலும் தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான ஆவணங்களை காண்பிக்க வேண்டும் என்ற உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இதனால் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு தயங்கி நின்றவர்களும் தற்போது தடுப்பூசியை ஆர்வமாக சென்று செலுத்தி வருகின்றனர். கடந்த வாரத்தில் 3 ஆயிரம் பேர் மட்டுமே செலுத்தி வந்த நிலையில், இந்த வாரம் மட்டும் 8 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர். எனவே ஒரு வாரத்திலேயே தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.

Source:Maalaimalar

Image Courtesy: Zee News


Tags:    

Similar News