புதுச்சேரி: அரசு ஊழியர்கள் சம்பளம் பெறுவதற்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்! - ஆளுநர் தமிழிசை!

புதுச்சேரி மாநிலத்தில் அரசு ஊழியர்கள் சம்பளம் பெறுவதற்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Update: 2021-09-16 06:34 GMT

புதுச்சேரி மாநிலத்தில் அரசு ஊழியர்கள் சம்பளம் பெறுவதற்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும் என்று பல்வேறு மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் அரசு ஊழியர்கள் சம்பளம் பெறுவதற்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் தடுப்பூசி சான்றிழ் இல்லை என்றால் அரசின் நலத்திட்டங்களை பெறுவதில் சிக்கல் ஏற்படும் எனவும் ஆளுநர் கூறியுள்ளார்.

Source: Dinakaran

Image Courtesy: விகடன்


Tags:    

Similar News