புதுச்சேரி மாநிலத்திற்கு ரூ.576 கோடி வழங்கிய மத்திய அரசு!

Update: 2022-06-02 06:47 GMT

ஜி.எஸ்.டி. இழப்பீடு தொகையாக புதுச்சேரி மாநில அரசுக்கு ரூ.576 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. மாநிலங்களுக்கு இழப்பீடு நாடு முழுவதும் சரக்குசேவை வரி கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இந்த வரியை அமல்படுத்துவதால் மாநிலங்களுக்கு ஏற்படுகின்ற வருவாய் இழப்பை ஈடுகட்டுவதற்கு 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

மேலும், இழப்பீடு வழங்குவதற்கான சில பொருட்கள் மீது மத்திய அரசு செஸ் வரி வசூல் செய்கிறது. அதன் மூலமாக கிடைக்கும் தொகையானது ஜி.எஸ்.டி. இழப்பீட்டு நிதியத்தில் சேர்க்கப்படுகிறது. அதன்படி இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், மே 31ம் தேதி வரை வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டு நிலுவை தொகையானது மத்திய அரசு முழுமையாக விடுவித்தது. அதன்படி புதுச்சேரி அரசுக்கு ரூ.576 கோடி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Daily Thanthi

Image Courtesy:Telegraph India

Tags:    

Similar News