புதுச்சேரியை தொழில்துறையில் முன்னேறிய மாநிலமாக்குவதே கனவு: ஆளுநர் தமிழிசை பேச்சு!
புதுச்சேரியை தொழில்துறையில் முன்னேறிய மாநிலமாக்குவதே கனவு என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
காலாப்பட்டு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் அரசு சார்பில் 2 நாள் மெகா வேலை வாய்ப்பு முகாம் தொடங்கியது. இந்த முகாமை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜ் தொடங்கி வைத்தார். இதில் 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களின் அதிகாரிகள் பங்கேற்று ஆட்களை தேர்வு செய்தனர். இதில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணையை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வழங்கினார்.
நிபுனா மற்றும் சேவா இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் புதுச்சேரி அரசு இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாமினை மாண்புமிகு துணைநிலை ஆளுநர் @DrTamilisaiGuv தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்டபோது.#jobfair2022 pic.twitter.com/bAcjMsLhvd
— A.Namassivayam (@ANamassivayam) March 5, 2022
இதன் பின்னர் ஆளுநர் பேசியதாவது: கல்லூரி முடித்துவிட்டு வரும் மாணவர்களுக்காக ஆண்டு தோறும் இது போன்ற வேலை வாய்ப்பு முகாம்கள் நடைபெற வேண்டும். நான் ஆளுநர் என்கின்ற முறையில் தொழில் முனைவோர் அனைவரையும் வரவேற்கிறேன். மேலும் வருங்காலங்களில் தொழில்துறையில் முன்னேறிய மாநிலமாக புதுச்சேரியை மாற்றுவதே என்னுடைய கனவு. இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Twiter