புதுச்சேரியில் மருத்துவம், செவிலியர் படிப்புகளுக்கு கடந்த ஆண்டு கட்டணத்தையே இந்த ஆண்டும் வாங்க வேண்டும் என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதுச்சேரியில் ஆளுநர் பரிந்துரையின்படி சென்டாக் கலந்தாய்வு மூலமாக 2022ம் ஆண்டு கல்வியாண்டுக்கான மருத்துவம், பல் மருத்துவம், பி.பார்ம், செவிலியர் உள்ளிட்ட படிப்பிற்கு அரசு ஒதுக்கீடு செய்து சேர்ந்த மாணவர்களுக்கு கடந்த ஆண்டு போன்று இந்த ஆண்டும் கல்வி கட்டணம் வசூல் செய்ய வேணடும். இதில் எவ்வித மாற்றமும் இல்லை என கூறப்பட்டுள்ளது.
மேலும், அதிகமான கட்டணம் வசூல் செய்யும் பட்சத்தில் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Daily Thanthi