புதுச்சேரி நகராட்சி முக்கிய சாலைகளில் வாகன நிறுத்த கட்டணம்!

Update: 2022-03-17 04:31 GMT

புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அதில் இருந்து வரும் வருவாயில் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அதன் மூலமாக கிடைக்கின்ற வருவாய் சரியாக கிடைக்காமல் இருப்பதால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் பிரச்சினைகள் உள்ளது. இதற்கிடையில் பிற அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போன்று தங்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என ஊழியர்கள் அரசை வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போதைய நிலையில் நிதி பற்றாக்குறை இருப்பதால் அரசால் முடியாது என கூறப்படுகிறது. இதனால் நகராட்சியே தங்களுக்கான வருமானங்களை ஈட்டிக்கொள்ள வழிவகை செய்துள்ளது. அதன்படி முக்கிய சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு வரி வசூல் செய்ய திட்டமிட்டுள்ளது. இப்பணி தனியாருக்கு டெண்டரும் விடப்பட்டுள்ளது.

அதன்படி சிங்காரவேலர் திடல் பகுதி, நேரு வீதி, ராஜா தியேட்டர் முதல் போக்குவரத்து காவல் நிலையம் வரையில், அண்ணா சதுக்கம் முதல் ராஜா தியேட்டர் சிக்கனல், அதிதி ஓட்டல் சந்திப்பு வரையில், அரசு மருத்துவமனை சுற்றியுள்ள பகுதிகள், தூய்மா வீதி, ரோமண்ரோலண்ட் வீதி, உள்ளிட்ட சாலைகள் அடங்கும் என கூறப்பட்டுள்ளது.

Source: Daily Thanthi

Image Courtesy: The Hindu

Tags:    

Similar News